போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, தொழிலரசங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தனியார் மூலம் நியமன முறைக்கு எதிர்க்க ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமன முறைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பணிமனைகளில் இருந்து மீண்டும் வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பஸ்களை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டை ,கே.கே. நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும், அரசு பஸ்கள் குறைந்து எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் இது மாலை நேரம் என்பதால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அளித்த அறிவுறுத்தல் படி உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்குகிறோம் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வர ஒத்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

The post போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: