2030ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்ப சீனாவும் முடிவு

பெய்ஜிங்: 2030ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பி வைப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக என்று சீனா அறிவித்துள்ளது. சீனா விண்வெளியில் டியாங்காங் விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. விண்வெளி நிலையத்துக்கு ஏற்கனவே 2 முறை விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வீண்வெளி வீரர்களின் 3வது குழு இன்று புறப்படுகின்றனர். இதற்கான விண்கலம் ஏவப்படுவதற்கு முன்னதாக மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீன விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் லின் ஜிகுயாங் கூறுகையில், ‘‘2030ம் ஆண்டுக்குள் சீனாவின் முதல் மனிதர்களை தரையிறங்க செய்வது மற்றும் நிலவு அறிவியல் ஆய்வு, அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே சீனாவின் இலக்காகும்” என்றார்.

The post 2030ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்ப சீனாவும் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: