அமெரிக்காவில் அதிசயம் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்

மிசோரி: கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு தனது 95 வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் வேறு ஒரு இடத்தில் புதைக்க சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் கெடாமல் இருந்தது.

இதனால் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரது உடல் அங்குள்ள கண்ணாடி பேழையில் வைக்கப்பட உள்ளது.

The post அமெரிக்காவில் அதிசயம் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல் appeared first on Dinakaran.

Related Stories: