ஜப்பான் பிரதமர் மகனின் பதவி பறிப்பு

டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரா கிஷிடா பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான நிர்வாக கொள்கை செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி உறவினர்கள், நண்பர்களுக்கு பிரதமரின் அலுவலக இல்லத்தில் இரவு விருந்து அளித்த புகைப்படங்கள் வார இதழில் வெளியானது.

இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் கிஷிடா, “பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் என்று பொது பொறுப்பில் இருந்து கொண்டு, அவர் செய்த செயல் சரியானதல்ல. எனவே அவர் தனது பொறுப்பை உணரும் வகையில், அவரது பதவி பறிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக டாயாயோஷி யமமோடோ, வியாழக்கிழமை பதவி ஏற்பார்,” என்று தெரிவித்தார்.

The post ஜப்பான் பிரதமர் மகனின் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: