ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?ஆபத்தான நிலையில் சிகிச்சை

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பெலாரஸ் அதிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுடன் ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருவதால் அதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன . எனினும் ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் தொடர்ந்து ரஷ்யாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷென்கோ, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.

இருவரும் தனியாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் அதிபர் லுக்காஷென்கோ திடீரென மாஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிபர் லுக்காஷென்கோவிற்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெலாரஸ் எதிர்கட்சி தலைவர் வேலரி செப்காலோ தனது டிவிட்டர் பதிவில்,‘‘பெலாரஸ் அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு ரஷ்யா விஷம் கொடுத்தது என்ற தகவல் பரவுவதை தவிர்க்கவே , ரஷ்ய மருத்துவர்கள் அவரை காப்பாற்றத் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவருக்கு ரத்த சுத்திகரிப்பு செயல்முறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: