ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா: ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆடிப்பாடிய பொதுமக்கள்

பெர்லின்: பிரேசில், அர்ஜெண்டினா போன்ற ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கார்னிவல் எனப்படும் கலாச்சார திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பெர்லின் நகரில் இது போன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும் கலாச்சார விழா நடைபெற வில்லை. கொரோனா காரணமாக கார்னிவல் விழா கலையிழந்த நிலையில் இந்த ஆண்டு முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த 3 நாள் விழாவில் பல்லாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

வித்யாசமான முறையில் கோமாளி வேடமிட்டவர்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் வீதிகளில் நடனமாடிய படி சென்றனர். இது ஐரோப்பிய கண்டத்தில் ஜெர்மனியின் கலாச்சார பறைசாற்றி பிரதிநிதித்துவப்படுத்தும் விழா என்று இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்த கண்கவர் விழாவை காண ஜெர்மனியில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான கலா ரசிகர்கள் வைத்து இருந்தனர். பெர்லின் நகரின் கலை தாகம் தங்களின் வியப்பில் ஆழ்த்துகிறது என்று பிற பகுதிகளில் இருந்து வந்திருந்த பார்வையாளர்கள் கூறுகின்றன.

The post ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா: ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆடிப்பாடிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: