நிறுவன நாள் கொண்டாட்டத்தின் போது கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்: ஒருவர் பலி, ஏராளமானோர் படுகாயம்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். நேட்டோ என்ற வட அட்லாண்டிக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷ்யா மீது போர் தொடுத்தது. கடந்த 15 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், எல்லை நகரமான பாக்முட் ஆகிய இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து விட்டனர். வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் தரை மட்டமாகி விட்டன.

உக்ரைன் தலைநகர் கீவ் நிறுவப்பட்டு நேற்றுடன் 1,541 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கீவ் மீது ரஷ்யா நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய நடந்த தாக்குதலில் கீவ் நகரின் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. ரஷ்யாவின் 40 ஆளில்லா விமானங்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன. 5 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓராண்டை கடந்து நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் பிற நாடுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. போப் பிரான்சிசும் இருநாடுகளும் போரை நிறுத்த சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் தொடர்ந்து போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post நிறுவன நாள் கொண்டாட்டத்தின் போது கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்: ஒருவர் பலி, ஏராளமானோர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: