ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்

ஜப்பான்: ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது’ “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன்; 500 கி.மீ தூரத்தை 2.5 மணி நேரத்தில் அடைந்துவிடுவோம்; உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: