காத்மண்டு: நேபாளத்தில் இருந்து 3வது ஆண்டாக இந்தியாவுக்கு மின்சார ஏற்றுமதி தொடங்கியுள்ளது. நேபாள அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக அந்நாட்டின் உபரி மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா அனுமதி வழங்கியது. அதன்படி நேபாளம் இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தின் இமயமலை பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதால் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்தியாவுக்கு நேற்று முதல் 3வது ஆண்டாக மின்சார ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதுகுறித்து நேபாள மின்சார ஆணைய செய்தி தொடர்பாளர் சுரேஷ் பட்டாராய் கூறியதாவது, “கடந்த ஆண்டு ஜுன் முதல் நவம்வர் வரை நேபாளம் உபரி மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போது 3வது ஆண்டாக இந்தியாவுக்கு 600 மெகாவாட் மின்சார ஏற்றுமதி தொடங்கியுள்ளது” என்று கூறினார்.
The post நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி appeared first on Dinakaran.