ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி ரகம்; உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்: ஒரு கிலோ ரூ2.5 லட்சம்

கொப்பல்: உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழம் தற்போது கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மியாசாகி என்று அழைக்கப்படும் மாம்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ2.5 லட்சம் முதல் 2.7 லட்சத்தில் விற்பனை ஆகிறது. ஆண்டுதோறும் மாம்பழ பருவத்தில் கர்நாடக மாநிலம் கொப்பலில் மாம்பழ மேளாவை அரசு தோட்டக்கலைத்துறை நடத்துகிறது. இந்நிலையில், இந்தாண்டு மாம்பழ மேளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் துவங்கி, மே, 31ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு மாம்பழ மேளாவில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் நாட்டின் மியாசாகி வகை மாம்பழம் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமாக கருதப்படுகிறது. இந்த மாம்பழத்தின் விலை ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு பழம் ரூ40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் இருந்து உருவான இந்த மாம்பழங்கள் அவற்றின் சுவை, தரம் மற்றும் தனித்துவமான பண்புகளுக்காகப் புகழ் பெற்றவை. மேளாவில் வைக்கப்பட்டுள்ள மியாசாகி மாம்பழத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி ரகம்; உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்: ஒரு கிலோ ரூ2.5 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: