மாணவர்கள் பெரும் உற்சாகம் மாணவியர் விடுதி வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற கோாிக்கை

ஊட்டி, மே 26: ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி வளாகத்தில் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அதிகளவு கற்பூர மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது. இவை வளர்ந்து வானை தொடும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்கள் மழைக்காலங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இது போன்று குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற முன் வராமல் உள்ளது.

ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இதுபோல, ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி வளாகம் மற்றும் காது கேளாதோர் பள்ளி வளாகத்திலும் ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரத்தால் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு மட்டுமின்றி, தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் விபத்து அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்த மரங்களை அகற்ற வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி திறக்கும் முன்னர், இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post மாணவர்கள் பெரும் உற்சாகம் மாணவியர் விடுதி வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற கோாிக்கை appeared first on Dinakaran.

Related Stories: