உசிலம்பட்டியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆர்டிஓ தலைமையில் நடைபெற்றது

 

உசிலம்பட்டி, மே 25: உசிலம்பட்டியில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி பகுதியில் உள்ள 9க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து வர பயன்பாட்டில் உள்ளன.

இவற்றின் செயல்பாடுகள் குறித்து உசிலம்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு பணிகள் நேற்று நடைபெற்றன. இதற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, மதுரை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இந்திரா ஆகியோர் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பயன்பாடு, இன்ஜின், பிரேக், வாகனத்தின் தன்மை மற்றும் மாணவர்கள் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவை குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்து, போக்குவரத்து எஸ்ஐ சவுந்தரபாண்டி, தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஜீவா மற்றும் பரமானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி வாகனங்களின் டிரைவர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பாக விபத்து பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான முதலுதவி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

The post உசிலம்பட்டியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆர்டிஓ தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: