கூடலூரில் தீயணைப்புத்துறை சார்பில் பருவமழை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்

 

கூடலூர், மே 23: கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை காலங்களிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் நீர்நிலைகள் மற்றும் அவற்றின் அருகில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மார்டின் தலைமையில் கூடலூர் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் இரும்பு பாலம் பகுதியில் ஓடும் பாண்டியாற்றில் செயல் முறை விளக்கங்களை செய்து காண்பித்தனர்.

மழை வெள்ள மீட்பு பணிகள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் செயல்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், முதலுதவி அளிப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது போன்ற பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. உடனடி மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளூர் தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post கூடலூரில் தீயணைப்புத்துறை சார்பில் பருவமழை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: