சுற்றுலா பயணிகள் அவதி கூடலூரில் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் காயம் அடைந்த மான் மீட்பு

 

கூடலூர், மே 23: கூடலூர் அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த மானை வனத்துறையினர் மீட்டனர். கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குசுமகிரி சாலை, கல்குவாரி பகுதி, தாலுகா அலுவலக சாலை, தேவர் சோலை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்டமாக திரியும் தெருநாய்கள் நடமாட்டம் காரணமாக அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அக்ரகாரம் தெற்கு குடியிருப்பு பகுதியை ஒட்டி நேற்று அரிய வகை குரைக்கும் மான் ஒன்றை நான்கு தெரு நாய்கள் விரட்டி கடித்துள்ளன.
நாய்கள் மானை விரட்டி கடிப்பதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் நாய்களை விரட்டி மானை பாதுகாத்து, சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் காயங்களுடன் கிடந்த மானை மீட்டு, சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மானின் உடல்நிலை தேறிய பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் பநடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுற்றுலா பயணிகள் அவதி கூடலூரில் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் காயம் அடைந்த மான் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: