மதிமுக நிர்வாகிகள் தேர்தல் மாவட்ட செயலாளராக வளையாபதி தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் தேர்தலில், மீண்டும் மாவட்ட செயலாளராக வளையாபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் தேர்வு கூட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் தேர்வு, உத்திரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அவை தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மதிமுக கொள்கை விளக்கக் செயலாளர் வந்தியத்தேவன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, தேர்லை நடத்தினார். துணை பொது செயலாளர் மல்லை சத்யா முன்னிலை வகித்தார். மாவட்ட அவை தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

இதில், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விவரங்கள்: காஞ்சிபுரம் மாநகர செயலாளராக மகேஷ், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக அங்கம்பாக்கம் ஏழுமலை, காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளராக ராவணன், உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக ஏழுமலை, உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக மனோகரன், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் முச்சிந்தி, வாலாஜாபாத் பேரூர் செயலாளர் சிவகுமார், உத்திரமேரூர் பேரூர் செயலாளர் பொன்னூசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, மாவட்ட அவை தலைவர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் கன்னியப்பன், மாவட்ட துணை செயலாளர்களாக தயாளன், மணிவண்ணன், வெங்கடேசன், புஷ்பலதா ராமானுஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் அருள், பொதுகுழு உறுப்பினர்கள் மூர்த்தி, ஆனந்தன், முகம்மது அஷ்ரப் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

The post மதிமுக நிர்வாகிகள் தேர்தல் மாவட்ட செயலாளராக வளையாபதி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: