கவியின்பம் நிகழ்வு

 

ஊட்டி, மே 22: ஊட்டியில் உள்ள பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் ஒய்எம்சிஏ படிப்பகத்தில் கவியின்பம் நிகழ்வு நடந்தது. மலைச்சாரல் கவிஞர் பிரபு தலைமை வகித்தார். கற்றலின் கேட்டல் நன்று என்பதைப் போல கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோரின் கவிதை தொகுப்புகள் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர். இதில் கவிதாயினி மணி அர்ஜுணன், கவிஞர்கள் நீலமலை ஜேபி ஜமிலா பேகம், நிர்மலா, புலவர் சோலூர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். பாவேந்தர் இலக்கியப் பேரவை தலைவர் ஜனார்தனன் நன்றி தெரிவித்தார்.

The post கவியின்பம் நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: