புளியம்பாறையில் ராஜீவ்காந்தி நினைவு இல்லம் திறப்பு

 

பந்தலூர்,மே22: பந்தலூர் அருகே புளியம்பாறையில் ராஜீவ்காந்தி நினைவு இல்லம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று புளியம்பாறை பகுதியில் நினைவு இல்லம் திறப்பு விழா நடைப்பெற்றது.நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான கனேஷ் மற்றும்,சுல்தான் பத்தேரி எம்எல்ஏ பாலகிருஷ்ணன்,மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் போது ராஜீவ்காந்தியின் நினைவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் தாய்,தந்தை இல்லாத நாடுகாணி பகுதியை சேர்ந்த மோகனகாந்தி என்கிற பெண்ணிற்கு திருமண சீதனப் பொருட்களாக கட்டில்,பீரோ,குளிர்சாதனப்பெட்டி,வீட்டு உபயோகப் பொருட்களை சீதனமாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மாவட்ட கமிட்டி உறுப்பினர் அனீஸ்பாபு வரவேற்றார். நிர்வாகிகள் கோபிநாதன்,அசரப் வட்டார தலைவர்கள் ஹம்சா,ரவி,முகமது சபி,சிவராஜ், யூனஸ்பாபு,ரெஜிமேத்தியூ மற்றும் ஒன்றிய,நகர நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post புளியம்பாறையில் ராஜீவ்காந்தி நினைவு இல்லம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: