செம்பக் கொல்லி, பேபி நகர், மச்சிக்கொல்லியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 

கூடலூர்,மே22:கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சி கொல்லி,பேபி நகர், செம்பக்கொல்லி இடையேயான சுமார் 3 கி.மீ தொலைவிலான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் செம்ப கொல்லி கிராமம் முதுமலை புலிகள் காப்பக வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், இவர்களின் குழந்தைகள் பள்ளி செல்வதற்காகவும் பேபி நகர், மச்சிக்கொலி வழியாக தேவர் சோலை மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த சாலையில் குண்டும்,குழியுமாக மாறியதால் அவசர தேவைகளுக்கு ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களும் வரத் தயங்குவதால் நடந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப் பகுதியில் மோசமான நிலையில் உள்ள இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மற்றும் மக்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செம்பக் கொல்லி, பேபி நகர், மச்சிக்கொல்லியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: