தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்: அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், செந்தில்பாலாஜி பங்கேற்பு

செங்கல்பட்டு, மே 21: தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலைய கட்டிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், தமிழக குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் எஸ். ஆர். ராஜா,, ஈ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பாபு,மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஷண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்: அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், செந்தில்பாலாஜி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: