தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:
கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையாவிற்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன். தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் நடைபெற்ற பதவியேற்பு விழா. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: