கர்நாடக மது கடத்தியவர் கைது

 

ஈரோடு,மே19: தாளவாடி கர்நாடக மாநில எல்லைப்பகுதியான எல்லகட்டை சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் தாளவாடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த திகினாரை, அம்பேத்கர் வீதியை சேர்ந்த பசுவண்ணா(38) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 12 பாக்கெட் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல சித்தோடு போலீசார் நடத்திய சோதனையில், வாய்க்கால் மேடு என்ற இடத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த மோகனசுந்தரம்(40) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post கர்நாடக மது கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: