தென்மேற்கு பருவமழை துவக்கம் எதிரொலி ஊட்டியில் தீயணைப்பு துறையினர் மீட்பு ஒத்திகை

 

ஊட்டி, மே 19: நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அதன் பின்னர் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கின்றன. இந்த இரு பருவமழைகளின் போது மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பருவமழைகளின் போது ஏற்படும் பேரிடர்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஊட்டி தீயணைப்பு நிலையம் சார்பில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி ஆர்டிஓ., துரைசாமி தலைமை வகித்தார். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் ஸ்ரீதர் மற்றும் நிலைய பணியாளர்கள் பங்கேற்று பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளம் போன்றவற்றிலிருந்து எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிலச்சரிவு, மரம் விழுதல் போன்ற இடர்பாடுகளின் போது எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பேரிடர்கள் ஏற்படும் போது தற்காத்து கொள்ளுதல், மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

The post தென்மேற்கு பருவமழை துவக்கம் எதிரொலி ஊட்டியில் தீயணைப்பு துறையினர் மீட்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: