கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக பள்ளி, கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை போட்டி: திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டந்தோறும் பள்ளி, கல்லூரி அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. திமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். அணி தலைவர் ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முப்பெரும் விழாக்களில் மாணவர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தி, அதில் தேர்வாகிறவர்களுக்கு மாநில அளவில் “மாணவ நேசன்-முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றம் கட்டுரை போட்டிகளை நடத்த வேண்டும். “மாணவ நேசன்-கலைஞர் 100 கருத்தரங்கம்” மாவட்டந்தோறும் நடத்தப்படும். மாவட்ட அளவில் “மாணவ நேசன்-முத்தமிழறிஞர் கலைஞர் 100” விளையாட்டு போட்டி நடத்தப்படும். மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றும் வரை, முன்களப் படைவீரர்களாக மாணவர் அணி செயல்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக பள்ளி, கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை போட்டி: திமுக மாணவர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: