கர்நாடக தேர்தலில் பாஜ வெற்றி, தோல்வி சகஜம்: சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: ‘கர்நாடகா பொதுத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பது சகஜமானது’ என்று புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மீனவ மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சி பாஜக சார்பில் நேற்று வைத்திக்குப்பத்தில் நடந்தது. வி.பி ராமலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார். மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட மீனவர்களுடன் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்தியாவில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல்பாசி பூங்கா கொண்டு வந்திருக்கிறோம். புதுச்சேரி கடற்கரை பகுதியில் மிக விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள 5 மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச தரத்தில் நவீனமயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் பாஜ வெற்றி, தோல்வி சகஜமானது. இந்த தேர்தலை வைத்து மற்ற விஷயங்களை முடிவு செய்துவிட முடியாது. தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பு இருக்கிறது’ என்றார்.

The post கர்நாடக தேர்தலில் பாஜ வெற்றி, தோல்வி சகஜம்: சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் appeared first on Dinakaran.

Related Stories: