புனித யூதா ததேயு ஆலய ஆண்டு விழா

ஊட்டி, மே 11: ஆண்டு தோறும் ஊட்டி ெஹல்கில் பகுதியில் உள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த வாரம் பங்கு குரு மைக்கேல் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலை சிறப்பு நவநாள் மறையுரை நிகழ்த்தி சிறப்பித்தார் கேத்தி சாந்தூர் புனித மைக்கேல் ஆலய பங்கு குரு ஜெரோம், மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் இருபத்தி இரண்டு சிறுவர் சிறுமிகளுக்கு திருவருட்சாதனமான உறுதி பூசுதல் புது நன்மை வழங்கப்பட்டது.

செயின்ட் மேரிஸ் ஆலய பங்கு குரு செல்வநாதன் தலைமையில் ஆண்டு விழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட காசாளர் ஸ்டீபன் லாசர், எட்வின் சார்லஸ் மற்றும் டீக்கன் டிக்சன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து, மாலை ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு குரு மைக்கேல் பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.

The post புனித யூதா ததேயு ஆலய ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: