புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சந்தித்து பேசினார். வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசி உள்ளார்.
இந்நிலையில், புவனேஸ்வர் வந்த நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று பேசினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில் நிதிஷ் கூறுகையில், ‘‘நாங்கள் இருவரும் நீண்ட கால பழைய நண்பர்கள். கொரோனா காரணமாக சமீபகாலமாக சந்திக்க முடியவில்லை. இந்த சந்திப்பில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. முக்கியமாக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை’’ என்றார்.
The post நவீன் பட்நாயக்குடன் நிதிஷ் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.
