பிரமேந்திரர் ஆராதனை விழாவில் இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி

 

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சத்குரு சதாசிவப் பிரமேந்திரர் ஆராதனை இசை விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சோமநாதர் சன்னதி பின்புறம் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசைக் கலைஞர்கள் கூடி தங்களது இசையின் மூலம் பிரம்மேந்திரர் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தி கோஷ்டிகானம் பாடி ஆராதனை விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மேந்திரர் ஆராதனை இசைவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மகாலில் நடந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தொடர்ந்து வயலின், மிருதங்கம், மோர்சிங் உள்ளிட்ட பல்வேறு கருவிகளுடன் ஏராளமான கலைஞர்கள் தொடர்ந்து பாடினர். நேற்று காலை ஆனந்தவல்லி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பிரம்மேந்திரர், காயத்திரி தேவி, ரிஷபம் சூலம் விக்கிரகத்திற்கு 108 வகையான மூலிகைப்ெபாடிகளால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் பக்க வாத்தியக் கலைஞர்கள் கூடி தங்களது இசையின் மூலம் வாய்ப்பாட்டு மற்றும் கோஷ்டி கானம் பாடி பிரம்மேந்திரர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post பிரமேந்திரர் ஆராதனை விழாவில் இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: