புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலம்: தெற்கு நடை திறந்து வெளியே வந்த யானை

கேரளா: கேரளாவில் நடைபெறும் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு. தெற்கு நடை திறக்கும் சடங்கு விமரிசையாக நடைபெற்றது. யானை பகவதி அம்மன் திடம்பு ஏந்தி தெற்கு வாசலில் நடையை திறந்து வெளியே வந்தது. கேரளாவில் புகழ் பெற்ற திருச்சூர் வடக்கு நாதன் சிவன் கோவிலில் நடைபெறக்கூடிய பூரம் திருவிழாவானது ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான பூரம் திருவிழாவின் துவக்க நிகழ்வு இன்று 11 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெற்றது.

நெய்தலகாவு பகவதி அம்மனின் திடம்பு ஏந்திய எர்னாகுலம் சிவகுமார் என்ற யானை தெற்கு நடையையை திறந்து வைத்து வெளியேறிய சடங்கானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பூரம் திருவிழா எதிர்வர கூடிய 48 மணி நேரத்திற்கு திருச்சூரில் நடைபெறக்கூடிய பிரமாண்டமான பூரம். யானைகளின் அணிவகுப்பு, குடைமாற்ற நிகழ்ச்சி அதை தொடர்ந்து நடைபெறக்கூடிய வானவேடிக்கைகள் கண்கவரும் வீதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தாண்டு பூரம் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. இதில் தெற்கு நடையையை திறந்து சிவகுமார் என்ற யானை வெளியேறிய காட்சியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் தெற்கு நடை முன்பாக குடியிருந்தனர்.

The post புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலம்: தெற்கு நடை திறந்து வெளியே வந்த யானை appeared first on Dinakaran.

Related Stories: