ராமநாதபுரத்தில் அமைதி ஊர்வலம்

 

ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம்,ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி,முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாக்களில் வி.ஏ.ஓ.,க்கள் அரை நாள் விடுப்பு எடுத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான அமைதி ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனையில் துவங்கிய ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு லூர்து பிரான்சிஸ் உருவ படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓகள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் அமைதி ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: