புதுக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதவி உயர்வுக்கான ஆர்டர் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 50க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி மின்வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி பதவி உயர்வுக்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பதவி உயர்வு வழங்குவதில் வீண் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் விரைவாக பதவி உயர்வு வழங்க கோரி 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கமுகவர், முதல் நிலை பதவிகளுக்கான பதவி உயர்வு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன் பதவி உயர்வு கிடைத்துவிடும் என காத்திருந்தனர்.

தேர்தல் விதிமுறைகள் முடிந்த பின்னும், மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக பதவி உயர்வை வழங்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

The post புதுக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: