தலைஞாயிறு அருகே வடுகூர் உப்பு குளத்தை தூர்வார வேண்டும்

 

நாகப்பட்டினம்,ஜூன்19: தலைஞாயிறு அருகே வடுகூர் உப்பு குளத்தை வேளாண்மை பொறியியல் துறை மூலம் தூர்வார வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தலைஞாயிறு அருகே வடுகூர் ஊராட்சிக்கு சொந்தமான உப்பு குளம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

அந்த குளம் தண்ணீர் நஞ்சை புஞ்சை மானாவாரி பகுதி வயல் பாசனத்திற்கு ஆயில் எஞ்சின் மூலம் பல விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உப்பு குளத்தை சுற்றி கிழக்கே தலைஞாயிறு மேற்கே வடுகூர் வடக்கே காடந்தேத்தி மணக்குடி தெற்கே ஓரடியம்புலம் ஆய்மூர் பெருமழை கால்நடைகள் கோடை காலத்தில் மேய்ந்து விட்டு இந்த குளத்தில் தண்ணீர் குடிக்கும். ஆனால் தூர்வாராமல் விட்டதால் இப்போது நெய்வேலி காட்டாமணி செடி காடு போல் மண்டி கிடக்கிறது. எனவே இந்த உப்பு குளத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் தூர்வார வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post தலைஞாயிறு அருகே வடுகூர் உப்பு குளத்தை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: