அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த டூவீலர்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம்

 

அரியலூர், ஜூன் 19: அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், குற்ற வழக்குகளில் பிடிபட்ட டூவீலர்கள் நேற்று எஸ்பி முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பொது ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1000 செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்களும் ரூ.9,82,800 ஏலம் போனது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், மதுவிலக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தண்டபாணி, உதவி ஆய்வாளர் அமரஜோதி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த டூவீலர்கள் ரூ.9.82 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: