ஆலத்தூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை

 

பாடாலூர் ஜூன் 19: ஆலத்தூர் பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிகுளம் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது. மேலும், பலத்த சூறாவளி காற்று சுற்றி சுற்றி சுழன்று வீசியாதால் சாலையில் அள்ளப்படாமல் கிடந்த மண், குப்பை, கூழங்கல் சாலையில் செல்வோர் கடைகள் மீதும் வீசின.

பறந்த குப்பை மற்றும் மண்ணால், வாகன ஓட்டிகள் சற்று நேரம் அவதிப்பட்டனர். மேலும், சில மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தன. சூறாவளி காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் விளம்பர பதாகைகள், வீழ்ந்தும், கிழிந்தும் தொங்கின. இவைகள் காற்றில் பறந்த விழுந்த போது நல்வாய்ப்பாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு, இயல்பு நிலை திரும்பியது. பரவலான மழைக்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ஆலத்தூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை appeared first on Dinakaran.

Related Stories: