அரியலூர் மாவட்டத்தில் பத்ம விபூஷன் விருது பெற அழைப்பு

 

அரியலூர், ஜூன் 19: அரியலூர் மாவட்டத்தில் பத்ம விபூஷன் விருது பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருது வழங்கிட அறிவித்துள்ளது.

அந்த வகையில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவிக்கையில், கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அன்று பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் அகியவற்றிற்கு வித்யாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்), மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் பத்ம விபூஷன் விருது பெற அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: