சென்னை தீவுத்திடலில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். சென்னை விழா மே 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வங்க தேசம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாட்டின் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் அமைச்சர்கள் ராமசந்திரன், காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post சென்னை தீவுத்திடலில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: