நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வெலிங்டன்: நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அதே இடத்தில் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: