ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு

 

ஒட்டன்சத்திரம், ஏப். 23: ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் கோடை காலத்தை முன்னிட்டு பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், நீர் மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய அவை தலைவர் செல்லமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வலையபட்டி சின்னச்சாமி, மல்லையன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட அணி துணை அமைப்பாளர் சாகுல் அமீது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, தினேஷ்குமார் மற்றும் வார்டு செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: