வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காடு அங்காள பரமேஸ்வரி ஆலய திருவிழா

வேதாரண்யம்,ஏப்.19: வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி ஆலய திருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் கோவில் திருவிழா துவங்கபட்டது. இதையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இருந்து பால் காவடிகள் எடுத்து சென்று அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி பரிவார தெய்வங்களுடன் மேளதாளங்களுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் அப்பகுதி கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காடு அங்காள பரமேஸ்வரி ஆலய திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: