மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் 15 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது: பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் பேச்சு

திண்டுக்கல், ஏப். 17: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் 15 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளதாக பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மேற்கு பகுதி திமுக சார்பில் பேகம்பூரில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மேற்கு பகுதி செயலாளர் பஜுலுல் ஹக் தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா, மேயர் இளமதி, மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்.எல்.ஏ., ஐபி.செந்தில்குமார் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், திராட்சை, வெள்ளரி, மற்றும் பழங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோடை காலங்களில் பொதுமக்களின் தாகங்களை தீர்க்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டுமென அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மோர் பந்தலானது கோடை காலங்கள் முடியும் வரை பொதுமக்களின் கோடை வெயிலின் தாகத்தை தனித்து கொள்ளவும், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 15 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பகுதி கழக அவைத்தலைவர் கண்ணன், கவுன்சிலர்கள் மார்த்தாண்டன், விஜயா, பகுதிகளாக நிர்வாகிகள் பால தண்டாயுதம், சர்க்கரை, பாபு, இஸ்மாயில் ரமேஷ், காசிம், மௌலானா உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் மாநகர கிழக்குப் பகுதி திமுக சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் திறப்பு விழாவிற்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான இ.பெ.செந்தில்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த், மாநகர பொருளாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் விஜயகுமார், சுப்புராஜ், மெடிக்கல் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் அணி, சார்பு அணி மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் 15 இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது: பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: