குருவாயூர் கோயிலுக்கு பொலிவு படுத்தப்பட்ட அனந்த சயனம் ஓவியம் வழங்கல்

பாலக்காடு,ஏப்.14: குருவாயூர் கோவிலில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அனந்தசயனம் ஓவியத்தின் பொலிவு குறைந்த நிலையில் அதனை பொலிவுப்படுத்தி நாராயணன் நம்பீசன் மனைவி கே.பி.உமாதேவி கோவிலுக்கு வழங்கினார். கடந்த 1972ம் ஆண்டு நாராயணன் நம்பீசன் என்பவர் குருவாயூர் கோவிலுக்கு அனந்த சயனம் ஓவியத்தை வழங்கினார். இந்த ஓவியம் கால போக்கில் நிறம் மங்கிய நிலையில், பொலி விழந்து காணப்பட்டது. இதனை புதுப்பொலிவு செய்து அவரது மனைவி உமாதேவி தேவஸ்தான சேர்மன் டாக்டர். வி.கே.விஜயனிடம் வழங்கினார். குருவாயூர் தேவஸம் சுவர் ஓவியக் கலைஞர்கள் இதனை பொலிவுப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர் மனோஜ, நிர்வாரி விநயன், குருவாயூர் தேவஸம் சுவர் சித்திரப்பட மைய முதல்வர் கிருஷ்ணகுமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

The post குருவாயூர் கோயிலுக்கு பொலிவு படுத்தப்பட்ட அனந்த சயனம் ஓவியம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: