மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷுப் மஹிந்திரா மறைவு

புதுடெல்லி: மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷுப் மஹிந்திரா வயது மூப்பினால் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 99. இவர் அமெரிக்காவின் வார்ட்டனில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். தனது தந்தை ஜெகதீஷ் சந்திர மஹிந்திரா தொடங்கிய மஹிந்திரா குழுமத்தில் 1947ம் ஆண்டில் கேஷுப் மஹிந்திரா இணைந்தார். பின்னர் 1963ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மஹிந்திரா குழுமத்தின் தலைவராக பதவி வகித்தார். பணி ஓய்வு பெற்ற போது, அவரின் சகோதரரின் மகன் ஆனந்த் மஹிந்திராவை குழுமத்தின் தலைவராக அறிவித்தார்.

The post மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷுப் மஹிந்திரா மறைவு appeared first on Dinakaran.

Related Stories: