கீழ்வேளூர் அருகே செம்பியன் ஆத்தூர் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கீழ்வேளூர், ஏப் 11: கீழ்வேளூரை அடுத்த செருநல்லூர் ஊராட்சி செம்பியன் ஆத்தூர் திரவுதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செருநல்லூர் ஊராட்சி செம்பியன் ஆத்தூர் திரவுதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை தொடங்கியது. மாலை யாகவேள்வியுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

9ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று சாமிகளுக்கு மருந்து சாத்துதல் நடைபெற்றது. இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் காலயாக பூஜை நடைபெற்று யாகசாலை பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரத்தில் உள்ள தங்க கலசத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலில் உள்ள பிள்ளையார், முருகன் கோயில் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராமவாசிகள், மருளாளிகள் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் அருகே செம்பியன் ஆத்தூர் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: