முத்தியால்பேட்டை ஊராட்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் கிராம மக்கள் குடத்துடன் மறியல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது படப்பம் கிராமப் பகுதி. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நாள்தோறும் தெருகுழாய்கள் மூலம் பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை அக்கிராம மக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், அதிகாரிகள் மெத்தனப் போக்கை கண்டித்தும், சீரான குடிநீர் வினியோகத்தை வலியுறுத்தியும் நேற்று காலை  முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வாலாஜாபாத்-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் போலீசார், ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெறும் என ஒன்றிய அதிகாரிகள் உறுதி கூறினர். இதை ஏற்று, கிராம மக்கள்  கலைந்து சென்றனர்….

The post முத்தியால்பேட்டை ஊராட்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் கிராம மக்கள் குடத்துடன் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: