ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்திய 1,000 கிலோ குட்கா பறிமுதல்-அம்பாத்துரை போலீசார் அதிரடி

சின்னாளபட்டி : ஒசூரில் இருந்து மதுரைக்கு வேனில் கடத்திய சுமார் 1,000 கிலோ குட்கா பொருட்களை அம்பாத்துரை போலீசார் பறிமுதல் செய்தனர். ஓசூரில் இருந்து மதுரை பழ மார்க்கெட்டிற்கு வந்த வாகனத்தில் பழ மூட்டைகள் இடையே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி வரப்படுவதாக அம்பாத்துரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கம்பெனி முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், சாத்துக்குடி பழ மூட்டைகளுக்கு இடையே 24 மூட்டைகளில் சுமார் 1,000 கிலோ குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தது தெரிந்தது. விசாரணையில், டிரைவர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பிரசாந்த் (29), உதவியாளர் ஈஸ்வரன் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 1,000 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தகவலறிந்து வந்த எஸ்பி சீனிவாசன், பறிமுதல் செய்த குட்கா ெபாருட்களை பார்வையிட்ட பின், வாகனத்தை கண்டறிந்து பிடித்த அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாரை பாராட்டினார்….

The post ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்திய 1,000 கிலோ குட்கா பறிமுதல்-அம்பாத்துரை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: