தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆய்வு

கோத்தகிரி, மார்ச் 27: நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் சங்கம் ஐஎன்டியூசி சார்பில் கூடலூர் தனியார் எஸ்டேட் நிர்வாகிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஐஎன்டியுசி சங்கத் தலைவர் முகமது ஆலோசனையின் பேரில் ஐஎன்டியூசி சங்க செயல் தலைவர் பாலசுந்தரம், பொதுச்செயலாளர் ராஜகோபால் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறைபாடுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தேயிலை தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை, பிடித்தம், காப்பீடு இவைகள் உரிய முறையில் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் ஓய்வு காலத்தில் பணப்பயன் மற்றும் பென்ஷன் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தனர். அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏரியா கமிட்டி ஐஎன்டியூசி பொறுப்பாளர் சத்தியம் மற்றும் துணைத்தலைவர் ஆசீர் கலந்து கொண்டு குறைகளை கேட்டு அறிந்தனர்.

பின்னர் செயல் தலைவர் பாலசுந்தரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் விரைவில் பிராவிடண்ட் பண்டு கமிஷனரையும், எல்ஐசி மேலாளர் மற்றும் தனியார் எஸ்டேட் செயலாளர் ஆகியோரிடம் இது சம்பந்தமாக மனு அளித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். கூட்டத்திற்கு பிறகு 140 உறுப்பினர்கள் கமிட்டி தலைவர் ஐயப்பன் தலைமையில் செயல் தலைவர் பாலசுந்தரம் முன்னிலையில் ஐஎன்டியூசி தோட்டத்து தொழிலாளர்களை சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி ஒப்புதல் கடிதத்தை அளித்தனர். சின்னையன் நன்றி கூறினார்.

Related Stories: