வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு

பாலக்காடு:  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தேங்குறிச்சி பகுதியில் தனியாக வசிக்கும் பெண்ணை மர்மநபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.  பாலக்காடு மாவட்டம் தேங்குறிச்சியை அடுத்த கோட்டப்பள்ளம் என்ற இடத்தில் வசிப்பவர் உஷா (42). கூலித்தொழிலாளி. பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே முடப்பல்லூரை சுரேந்திரன்,உஷா தம்பதியினர் கடந்த ஒரு வருடமாக தேங்குறிச்சி அடுத்த கோட்டப்பள்ளத்தில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே தம்பதிக்கிடையை குடும்பத் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உஷா தனியாக தங்கியிருந்த வீட்டின் பின்கதவை உடைத்து மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து உஷாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். உஷாவின் தலையில் வெட்டுக் காயமடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி நிலையில் படுக்கை அறையில் கிடந்துள்ளார்.  இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வடக்கஞ்சேரி போலீசாருக்கு தகவலளித்து விரைந்து வந்த போலீசார் உஷாவை மீட்டு ஆலத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவரது கணவர் சுரேந்திரன் மீது சந்தேகமடைந்த போலீசார் கணவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குழல்மந்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: