5ம் தேதி பாராளுமன்றம் முற்றுகை தேவர்சோலையில் குட்கா விற்க 2 பேர் கைது

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தேவர்ேசாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 40 பண்டல் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழகத்தில் குட்கா மற்றும் குட்கா போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும், அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இதற்கு தடை விதிக்கப்படாத நிலையில், அங்கிருந்து பலர் இதனை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடை செய்ய அவ்வப்போது போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டு, அதனை விற்பனை செய்யபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கின்றனர். எனினும், தொடர்ந்து சிலர் இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருேகயுள்ள தேவர்சோலை பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊட்டி ரூரல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் ஜாகீர் உசேன் என்பவர் கடையில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட 40 பண்டல் குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய் போலீசார் ஜாகீர் உசேன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

Related Stories: