அரசு காப்பக மாணவி உள்பட 2 பேர் மாயம்

ஈரோடு: ஈரோடு  அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் நல காப்பகம்  செயல்பட்டு வருகின்றது.  இந்த காப்பகத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி  நேற்றுமுன்தினம் காலை பள்ளிக்கு சென்றுள்ளார்.  பள்ளிக்கு சென்ற சிறிது  நேரத்திலேயே பள்ளிக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபருடன்  சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.  இது குறித்து தகவல் அறிந்ததும் காப்பாக  ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.  இது  குறித்து அரசு காப்பக கண்காணிப்பாளர் பிருந்தாதேவி சித்தோடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.  இதே போல கடத்தூர் அடுத்துள்ள கோரமடைபுதூ ரை சேர்ந்தவர்  காளியம்மாள்(24).  இவர் நேற்று முன்தினம் நம்பியூர் சென்று வருவதாக  கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர்  பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லாததால் கடத்தூர் போலீசில் புகார்  செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: