இளநீர் வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு

கோவை, மார்ச் 21:  கோவையில் இளநீர் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (56). இவர் சத்தி ரோட்டில் உள்ள ஒரு மில் எதிரே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வியாபாரத்தை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பழனிசாமியை மிரட்டி பணம் கேட்டார்.

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து பழனிசாமி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வியாபாரியை மிரட்டி பணம் பறித்தது கோவை வெள்ளானைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: