கெரடா மட்டம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.62.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் ஆய்வு

கோத்தகிரி, மார்ச் 20: கோத்தகிரியில் கெரடா மட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.62.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  தமிழக முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கெரடா மட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.62.40 லட்சம் மதிப்பீட்டில் காணொளி காட்சி மூலம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் ஆகியோர் பள்ளி கட்டிடத்தின் தரம் மற்றும் நீளம், அகலம் ஆகியவற்றையும், முறையான மற்றும் தரமான இடுபொருட்கள் கொண்டு கட்டப்பட்டு வருகிறதா எனவும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களுக்கு பல்வேறு வகையில் பற்பல சிறப்பு திட்டங்கள் கொண்டு மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அயராது பாடுபட்டு வரும் நிலையில் திமுக அரசின் மூலம் பல்வேறு நடவடிக்கை நடைபெற்று வருகிறது எனவும் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக கெரடா மட்டம் நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டும் பணியை செயல்படுத்தி லருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் எதிர் காலத்தில் நன்கு படித்து நல்ல முறையில் மிகப்பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனவும் பள்ளி வளர்ச்சி மற்றும் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை  தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது எனவும் அவர் வாழ்த்தினார். குறிப்பாக அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகள் ஏற்படுத்தி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் வரும் காலங்களில் பெற்றோர்களை தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து பள்ளி கட்டிடத்தின் பணி நிறைவுற்றவுடன் மேலும் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: